புதன், 12 மார்ச், 2014

5.சுருள் முடி நோய்.

சுருள் முடி நோய் தன்மை :


  1. தலையில் எழும் சுருள் முடியை அழகுடையது போல் இருக்கும்.
  2. தலையில் நைப்பற்று போவதால் முடியின் மினுமினுப்பும்,இயற்கை அழகும் கெடுகிறது.
  3. அழுக்கு மிகுந்து,இயற்கை நிறம் மாறுகிறது.
  4. தலை நாற்ற முற்று,பல நோய்களை தலையில் எழுகிறது,
  5. பொடுகு உண்டாகிறது.இதனால் மயிர் கழிந்து இறங்குகிறது.
சுருள் முடிக்கு தைலம் :


  • நொச்சி சாறு 1/2 படி 
  • கையான் தகரை  சாறு 1/2 படி 
  • வாசனை புல் சாறு (திருப்பன புல் )1/2 படி 
  • அவுரிசாறு  1/2 படி 
  • சின்னிசாறு  1/2 படி 
  • தேங்காய் எண்ணெய்   2.1/2 படி 
இவைகளை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூரிய புடம் வைத்து (வெய்யிலில் வைத்து சாறு சுண்ட வைத்து )பிறகு அடுப்பு ஏற்றி காய்ச்சி இருத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் சுருள் முடியும்,உதிர்தலும் போகும்.

சுருள் முடிக்கு உள்ளுக்கு சாப்பிட மருந்து :


  1. பறங்கி சக்கை 25 கிராம் 
  2. சுக்கு 25 கிராம்
  3. மிளகு 25 கிராம்
  4. திப்பிலி 25 கிராம்
  5. சதகுப்பை 25 கிராம்
  6. கொடிவேலி 25 கிராம்
  7. கருஞ் சீரகம் 25 கிராம்
  8. கற்கடக சிங்கி (கடுக்காய் பூ )25 கிராம்
  9. அதிமதுரம் 25 கிராம்
  10. இசங்கு 25 கிராம்
  11. கார்போக அரிசி 25 கிராம்
  12. அமுக்குரா 25 கிராம்
  13. சர்க்கரை 300 கிராம் 
இவைகளை தனி தனியே பொடித்து சலித்து சர்க்கரையுடன் சேர்த்து சலித்து ஒன்றாக்கி சூரணம் செய்து வைத்து கொண்டு காலை,மாலை வெருகடி அளவு சாப்பிட்டு வர சுருள் முடி ,பொதிவு முடி,ஊரல்,குத்து வலி போன்றவை நீங்கும்.

தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :

+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.






























































3.கீறல் முடி நோய்

கீறல் முடி நோய்யின் தன்மை :

உடலின் சூட்டை தணிக்கக் தலைக்குளிப்பது வழக்கம்.குளித்த பின்பு ,தலை மயிரைக் கோதித் துவரத்துவது பெண்களுக்கு வழக்கம்.வேகமாய்க் கோதி உலர்த்தும் போது,முடியானது பிளவு பட்டு போகிறது.முடியில் வெய்யில் பட,முடியும்.பரபரப்பாய்,பொடியாக நொறுங்கி போகும்.முடியின் நுனி கீறல் ஏற்படும் போது யாதொரு நோவும் தோன்றாது.


முடி கீறலுக்கு எண்ணெய் : 

1.முற்றிய தேங்காயை துருவி பால் எடுத்து,அதைக் காய்ச்சிய உருக்கு நெய்யும்,1/2 படி 
2.ஆமணக்கு எண்ணெய்,1/2 படி
3.பசும்பால்,1/2 படி
4.பசுவின் நெய் 1/2 படி
5.பொன்னாகண்ணி சாறு 2 படி,
6.அதிமதுரம் 1/2 பலம் 
7.செஞ்சந்தனம்  1/2 பலம் 
8.தேவதாரம்  1/2 பலம் 
9.கருஞ் சீரகம்  1/2 பலம் 
10.ஏலம்  1/2 பலம் ,

6 முதல் 10 சரக்குகளை தனித்  தனியே பொடித்து,சேர்த்து பசும்பால் விட்டு மை போல் அரைத்து,நெய்கள் ,சாறுகளையும் ஒன்றாக்கி எண்ணையுடன் கலந்து அடுப்பெற்றி சிறு தீயாக எரித்து,காய்ச்சவும்,கலவையில் நுரை தோன்றிப் பின்பு மறையும் அப்போது கீழ் இறக்கி கற்கத்தை வடிகட்டி எண்ணெய் ஆறவிட்டு  புட்டியில் அடைத்து தானியத்துள் வைத்து மூடி 8 நாட்கள் பத்திர படுத்தவும்.

உபயோகிக்கும் முறை :

இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் கீறல் முடி நோய்   நீங்கும்.மறுபடியும் ரோமம் செழுமையாக வளர தொடங்கும்.



தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :

+91 9894618455.
 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.


2.பொடிவு முடி நோய் :

பொடிவு முடி நோய் தன்மை :

  • தலை முடி தினமும் எண்ணெய் தேய்த்து வந்தாலும்,துண்டு துண்டாக பொடிந்து விழும்,இதற்கு காரணம் தலை முடி சூட்டினால் நோய்யுற்று இருப்பதே காரணம்.இதனால் முடி உதிர்ந்து இடைவெளியும் ஏற்பட்டு முடியும் குறுகி போகும்.நீள மான முடி குட்டையாகி விட்டதால் அம்முடியை கையால் முடிவதற்கும் கட்டுவதற்கும்,விருப்பம் போல் சீ வுவதற்கும் முடியாது.
  • இதனால் மனதில் ஏக்கமும்,முகத்தில் கவலையின் வாட்டமும் எழுகிறது.
  • தலை முடி பொடிவு நோய் பெண்களுக்கு அல்லாது ஆண்களுக்கு பொதுவாக வராது.
  • தலை பொடிவு நோய் வந்தவர்களை குறுகிய மயிரைக் கண்டு பிறர் நகையாடுவார்கள்.இதை தீர்க்க மருந்து.
பொடிவு முடி நோய்க்கு  கூந்தல் தைலம் :

கமுகம்பூ சாறு 1 படி,
தாழை விழுது சாறு 1 படி,
வெற்றிலை சாறு 1 படி,
கையான் தகரை சாறு 1 படி,
முதியார் கூந்தல் சாறு 1 படி,

நல்லெண்ணெய் 5 படி 

எல்லாம் ஒரே வாய் அகன்ற தைல பாத்திரத்தில் ஊற்றி வெய்யிலில் 1 வாரம் சாறுகள் சுண்ட வைத்து எடுத்து புட்டியில் பத்திர படுத்தவும்.

இந்த தைலத்தை பொடிவு முடிக்கு தேய்த்து வர பொடிந்து இறங்கிய மயிர் கருமையாகவும்,செழுமையாகவும் வளர்ந்து வரும்.

தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :
+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.


1.செம்பட்டை முடி நோய் :

செம்பட்டை முடி நோய் வரும் காரணம்:

  • உடலில் பல காரணங்களால் உஷ்ணம் ஏற்பட,அந்த சூடு தலை மயிர்,
  • மயிர் கால்,மண்டையோட்டின் மேற்பக்கம் வரை பரவுகிறது.இதனால் கறுப்பு நிறமான மயிர் செம்பட்டை நிறமாக மாற்ற மடைகிறது.மற்றும் மயிரின் நுனிப்பாகம் கீறி தோற்றமளிக்கும்.
இதற்கு மருந்து :

சுத்தமான நல்லெண்ணெய் சுட வைத்து ஆறவைத்து தலையில் நிரம்ப தேய்த்து,இள வெந்நீரில் வாரம் இரு முறை குளித்து வர செம்பட்டை மயிர் கரு நிறமடையும்.

மற்றோரு எண்ணெய் முறை :

நல்லெண்ணெய் 1/2 படி 
ஆமணக்கு எண்ணெய் 1/2 படி
தேங்காய் எண்ணெய் 1/2 படி

கையாந்தகரை சாறு 3/4 படி 
கொடுப்பை சாறு 3/4 படி
பசும்பால் 3/4 படி
காத்தொட்டி சாறு 3/4 படி

காசோலம் 2 பலம்,
பச்சிலை  2 பலம்,
வெட்டிவேர்  2 பலம்,
செஞ்சந்தனம் 2 பலம்,
தேவதாரம் 1/2 பலம்,

கடை சரக்குகளை தனித்தனியே பொடித்து சேர்த்து பசுவின் பாலால் நன்கு அரைத்து,மேற்படி சாறுவகைகளுடன் ஒன்று சேர்த்து,அடுப்பில் வைத்த தைல பாத்திரத்த்தில் எண்ணெய்களையும்,சாறு வகைகளையும்  ஒன்றாக்கி சிறு தீயாக எரித்து வண்டல் மெழுகு பதத்தில் இறக்கி வடிகட்டி பரணியில் பத்திர படுத்தவும்.

உபயோகிக்கும் முறை:

இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் மயிர் கால்களிலும்,சருமத்திலும்,இவ் வெண்ணையின் சத்து இறங்கி உடலில் தாவிய சூட்டை மாற்றும்.செம்பட்டை மயிர் கருமை நிறமாக மாறும்.

தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :

+91 9894618455.
 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

சனி, 11 ஜனவரி, 2014

4.வழுக்கை தலை நோய்

வழுக்கை தலை நோய் வரும் காரணம் :


  • தலையிலும்,முகத்திலும் வளரும் முடியின் அடிப்பக்கத்தில் வியர்த்து,அது உலர்ந்து போகும் முன்பு நுண்ணிய கிருமிகள் கலந்த குளிர்ந்த நீரைக் குடிக்குமிடத்து,தண்ணிரில் உள்ள கிருமிகள் ரோம கால்களில் தாக்குகிறது.



  • கிருமிகளால் பாதிக்கப்பட்ட மயிர் கால்களில் ஊரல் எழுகிறது.அப்போது சொரிவதால்,மயிர் ஒவ்வொன்றாக விழுந்து விடுகிறது.



  • மயிர் விழுந்த இடம் நயப்பற்றதாகி விடும்.இதனால் சிலருக்கு,அவ்விடத்தில் கூச்சம் ஏற்பட்டு வழுக்கையும் ஆகி எவ்வேளையிலும் கவலையும்,தொல்லையும் காண்பார்.



  • வழுக்கையின் காரணமாகக் கழுத்தின் மேல் பாகத்திலுள்ள முடியெல்லாம் கொட்டி விடுகிறது.



  • இது ஆண் பெண் இருபாலரையும்,நாண வைக்கும்.



  • இந்த நோயுற்றவர் படைத்தவனை நினைத்து,நினைத்து மனவாட்டம் கொள்வர்.



  • உடம்பு வலிக்க சுமை சுமந்து வாழ்வோர்க்கும்,மன மகிழ்ச்சியினால் பூரித்த வாழ்வு வாழ்வோர்க்கும்,தலையில் பிறை போன்று வழுக்கை விழுகிறது.



  • இது ஏழை,பணக்காரன் என்று பார்பதில்லை.போன ஜென்ம செயல் பிசகாய் வந்த வழுக்கை உயர்வான எண்ணையாலும்,பூச்சாலும்,பூரணமாய் நலமுறும்.

இதற்கு பூச்சு மருந்து: 

குப்பைமேனி இலை,நிலாவாரை இலை,கற்பூரம் இவை முன்றையும் கசக்கி சாறு எடுத்து,வழுக்கை உள்ள இடங்களில் பூசிவர முடி முளைக்கும்.வழுக்கை இடத்தில் உள்ள கிருமிகளும் அகலும். 

எண்ணெய் மருந்து :















தேங்காய் எண்ணெய்  1 படி 
குப்பை மேனி சாறு    1 படி 
கருஞ்சீரகம்  17 கிராம்,
குப்பைமேனி வேர் தோல் 17 கிராம்.

   கருஞ் சீரகத்தையும்,குப்பைமேனி வேர் தோலையும்,குப்பை மேனியின் சாற்றால் அரைத்து கற்கமாக்கி,மீதி சாற்றில் கலந்து,பின்பு எண்ணையுடன் கலந்து  அடுப்பெற்றி சிறு தீயாக எரித்து,வண்டல் மெழுகு பதத்தில் கீழ் இறக்கி கற்கத்தை வடிகட்டி வடி கலசத்தில் 18 கிராம் சூடம் பொடித்து போட்டு எண்ணெய் ஊற்றி ஆறவிட்டு  புட்டியில் பத்திர படுத்தவும்.தானிய புடம் 1 வாரம் வைத்து எடுக்கவும். 

உபயோகிக்கும் முறை :

இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் தலையில் கிருமிகள் உடலைவிட்டு நீங்கும். வழுக்கை,புழுவெட்டு,ஊறல் நீங்கும் மறுபடியும் ரோமம் முளைக்கும்.


தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :

+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

வியாழன், 9 ஜனவரி, 2014

6.உதிர் தலை நோய்.


  •  தலையிலுள்ள மயிரில் நோய் உண்டாகி சொறிந்திட நேரிடுகிறது.

  • ஊரலின் காரணமாக மயிரும் உதிரும்.

  • சிலருக்கு மயிர் ஒடிந்து விழும்.இப்படி ஒடிந்து விழுகின்ற மயிர் கால்களில் காற்று பட்டால் விஷம் போல் குளிர்ச்சி ஏறும்.

  • தொடர்ந்து உஷ்ணமும் தலையில் உண்டாகும்.  
இதற்கு  எண்ணெய் மருந்து :


  1. கரிப்பான் சாறு.1படி ,
  2. நொச்சி சாறு.1படி, 
  3. தேங்காய் எண்ணை 2 படி ,
  4. மஞ்சள்   9 கிராம்,
  5. கருஞ்சீரகம்,9 கிராம் ,
  6. தேவதாரம் 9 கிராம் ,
  7. கோட்டம் 9 கிராம், 
  8. வங்காளப் பச்சை 9 கிராம் (பச்சை துருசு )
  9. கச்சோலம் 9 கிராம் ,
  10. ஏலம்  9 கிராம்.



உபயோகிக்கும் முறை:

இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் தலையில் முடி உதிர்வது நிற்கும்.தலையில் யுள்ள பீனிசம்,மண்டை இடி முதலிய நோய்களும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 

தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :
+91 9894618455.


 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

தலை மயிர் நோய்கள் மொத்தம் ஆறு :


  1. செம்பட்டை 
  2. பொடிவு 
  3. கீறல் 
  4. வழுக்கை 
  5. வெட்டு 
  6. உதிர்தல் 
செம்பட்டை,கீறல் இரண்டும் வந்தால் மயிரின் நுனிப்பாகம் நயப்பற்று,சிவந்து கீறும்.தினவும் நமைச்சலும் தலையில் எழுந்து,மயிர் உதிரும்.தலையில் தேய்க்கும் எண்ணெய் குணத்தாலும்,தலை மயிர் கரண்டு,பொடிந்திரங்கி,குறுகலாவது உண்டு . 
 ஒவ்வொரு நோய்களுக்கும் மருந்துகள் பின் வரும் தலைப்புகளில்;


 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.