புதன், 12 மார்ச், 2014

1.செம்பட்டை முடி நோய் :

செம்பட்டை முடி நோய் வரும் காரணம்:

  • உடலில் பல காரணங்களால் உஷ்ணம் ஏற்பட,அந்த சூடு தலை மயிர்,
  • மயிர் கால்,மண்டையோட்டின் மேற்பக்கம் வரை பரவுகிறது.இதனால் கறுப்பு நிறமான மயிர் செம்பட்டை நிறமாக மாற்ற மடைகிறது.மற்றும் மயிரின் நுனிப்பாகம் கீறி தோற்றமளிக்கும்.
இதற்கு மருந்து :

சுத்தமான நல்லெண்ணெய் சுட வைத்து ஆறவைத்து தலையில் நிரம்ப தேய்த்து,இள வெந்நீரில் வாரம் இரு முறை குளித்து வர செம்பட்டை மயிர் கரு நிறமடையும்.

மற்றோரு எண்ணெய் முறை :

நல்லெண்ணெய் 1/2 படி 
ஆமணக்கு எண்ணெய் 1/2 படி
தேங்காய் எண்ணெய் 1/2 படி

கையாந்தகரை சாறு 3/4 படி 
கொடுப்பை சாறு 3/4 படி
பசும்பால் 3/4 படி
காத்தொட்டி சாறு 3/4 படி

காசோலம் 2 பலம்,
பச்சிலை  2 பலம்,
வெட்டிவேர்  2 பலம்,
செஞ்சந்தனம் 2 பலம்,
தேவதாரம் 1/2 பலம்,

கடை சரக்குகளை தனித்தனியே பொடித்து சேர்த்து பசுவின் பாலால் நன்கு அரைத்து,மேற்படி சாறுவகைகளுடன் ஒன்று சேர்த்து,அடுப்பில் வைத்த தைல பாத்திரத்த்தில் எண்ணெய்களையும்,சாறு வகைகளையும்  ஒன்றாக்கி சிறு தீயாக எரித்து வண்டல் மெழுகு பதத்தில் இறக்கி வடிகட்டி பரணியில் பத்திர படுத்தவும்.

உபயோகிக்கும் முறை:

இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் மயிர் கால்களிலும்,சருமத்திலும்,இவ் வெண்ணையின் சத்து இறங்கி உடலில் தாவிய சூட்டை மாற்றும்.செம்பட்டை மயிர் கருமை நிறமாக மாறும்.

தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :

+91 9894618455.
 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக