சனி, 11 ஜனவரி, 2014

4.வழுக்கை தலை நோய்

வழுக்கை தலை நோய் வரும் காரணம் :


  • தலையிலும்,முகத்திலும் வளரும் முடியின் அடிப்பக்கத்தில் வியர்த்து,அது உலர்ந்து போகும் முன்பு நுண்ணிய கிருமிகள் கலந்த குளிர்ந்த நீரைக் குடிக்குமிடத்து,தண்ணிரில் உள்ள கிருமிகள் ரோம கால்களில் தாக்குகிறது.



  • கிருமிகளால் பாதிக்கப்பட்ட மயிர் கால்களில் ஊரல் எழுகிறது.அப்போது சொரிவதால்,மயிர் ஒவ்வொன்றாக விழுந்து விடுகிறது.



  • மயிர் விழுந்த இடம் நயப்பற்றதாகி விடும்.இதனால் சிலருக்கு,அவ்விடத்தில் கூச்சம் ஏற்பட்டு வழுக்கையும் ஆகி எவ்வேளையிலும் கவலையும்,தொல்லையும் காண்பார்.



  • வழுக்கையின் காரணமாகக் கழுத்தின் மேல் பாகத்திலுள்ள முடியெல்லாம் கொட்டி விடுகிறது.



  • இது ஆண் பெண் இருபாலரையும்,நாண வைக்கும்.



  • இந்த நோயுற்றவர் படைத்தவனை நினைத்து,நினைத்து மனவாட்டம் கொள்வர்.



  • உடம்பு வலிக்க சுமை சுமந்து வாழ்வோர்க்கும்,மன மகிழ்ச்சியினால் பூரித்த வாழ்வு வாழ்வோர்க்கும்,தலையில் பிறை போன்று வழுக்கை விழுகிறது.



  • இது ஏழை,பணக்காரன் என்று பார்பதில்லை.போன ஜென்ம செயல் பிசகாய் வந்த வழுக்கை உயர்வான எண்ணையாலும்,பூச்சாலும்,பூரணமாய் நலமுறும்.

இதற்கு பூச்சு மருந்து: 

குப்பைமேனி இலை,நிலாவாரை இலை,கற்பூரம் இவை முன்றையும் கசக்கி சாறு எடுத்து,வழுக்கை உள்ள இடங்களில் பூசிவர முடி முளைக்கும்.வழுக்கை இடத்தில் உள்ள கிருமிகளும் அகலும். 

எண்ணெய் மருந்து :















தேங்காய் எண்ணெய்  1 படி 
குப்பை மேனி சாறு    1 படி 
கருஞ்சீரகம்  17 கிராம்,
குப்பைமேனி வேர் தோல் 17 கிராம்.

   கருஞ் சீரகத்தையும்,குப்பைமேனி வேர் தோலையும்,குப்பை மேனியின் சாற்றால் அரைத்து கற்கமாக்கி,மீதி சாற்றில் கலந்து,பின்பு எண்ணையுடன் கலந்து  அடுப்பெற்றி சிறு தீயாக எரித்து,வண்டல் மெழுகு பதத்தில் கீழ் இறக்கி கற்கத்தை வடிகட்டி வடி கலசத்தில் 18 கிராம் சூடம் பொடித்து போட்டு எண்ணெய் ஊற்றி ஆறவிட்டு  புட்டியில் பத்திர படுத்தவும்.தானிய புடம் 1 வாரம் வைத்து எடுக்கவும். 

உபயோகிக்கும் முறை :

இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் தலையில் கிருமிகள் உடலைவிட்டு நீங்கும். வழுக்கை,புழுவெட்டு,ஊறல் நீங்கும் மறுபடியும் ரோமம் முளைக்கும்.


தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :

+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக