புதன், 12 மார்ச், 2014

2.பொடிவு முடி நோய் :

பொடிவு முடி நோய் தன்மை :

  • தலை முடி தினமும் எண்ணெய் தேய்த்து வந்தாலும்,துண்டு துண்டாக பொடிந்து விழும்,இதற்கு காரணம் தலை முடி சூட்டினால் நோய்யுற்று இருப்பதே காரணம்.இதனால் முடி உதிர்ந்து இடைவெளியும் ஏற்பட்டு முடியும் குறுகி போகும்.நீள மான முடி குட்டையாகி விட்டதால் அம்முடியை கையால் முடிவதற்கும் கட்டுவதற்கும்,விருப்பம் போல் சீ வுவதற்கும் முடியாது.
  • இதனால் மனதில் ஏக்கமும்,முகத்தில் கவலையின் வாட்டமும் எழுகிறது.
  • தலை முடி பொடிவு நோய் பெண்களுக்கு அல்லாது ஆண்களுக்கு பொதுவாக வராது.
  • தலை பொடிவு நோய் வந்தவர்களை குறுகிய மயிரைக் கண்டு பிறர் நகையாடுவார்கள்.இதை தீர்க்க மருந்து.
பொடிவு முடி நோய்க்கு  கூந்தல் தைலம் :

கமுகம்பூ சாறு 1 படி,
தாழை விழுது சாறு 1 படி,
வெற்றிலை சாறு 1 படி,
கையான் தகரை சாறு 1 படி,
முதியார் கூந்தல் சாறு 1 படி,

நல்லெண்ணெய் 5 படி 

எல்லாம் ஒரே வாய் அகன்ற தைல பாத்திரத்தில் ஊற்றி வெய்யிலில் 1 வாரம் சாறுகள் சுண்ட வைத்து எடுத்து புட்டியில் பத்திர படுத்தவும்.

இந்த தைலத்தை பொடிவு முடிக்கு தேய்த்து வர பொடிந்து இறங்கிய மயிர் கருமையாகவும்,செழுமையாகவும் வளர்ந்து வரும்.

தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :
+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக